மணலாறு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கடும் மோதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் ஏழு படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் ஜனகபுரவுக்கு வடக்கிலும் கிரிப்பன்வெவ பகுதியிலும் இடம்பெற்ற மோதல்களிலேயே இவ்விரு படையினரும் கொல்லப்பட்டதுடன் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம், இந்த மோதலில் புலிகள் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் மன்னார் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
வவுனியாவிலும் இதுபோன்ற கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.