தெனியாய ஜின்கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நீராடச் சென்ற ஐவர் காணாமல் போயுள்ளனர்.
தெனியாய ஆண்டாறுதெனிய ஜின்கங்கையில் நேற்று மாலை 5 மணியளவில் நீராடச் சென்றவர்களே காணாமல்போயுள்ளனர்.
இதுகுறித்து தெனியாய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
எனினும், நீண்ட நேரத் தேடுதலின் போதும் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.