அநுராதபுரம் கெப்பிட்டிகொலாவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு ஊர்காவல் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
கெப்பிட்டிகொலாவவில் யக்கவெவ - கரகாவெவ வீதியிலேயே நேற்றுக் காலை 7.45 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடமை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊர்காவல் படையினரே இந்தக் கிளைமோர் தாக்குலுக்கிலக்காகி படுகாயமடைந்தனர்.
இவ்விருவரும் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் விஷேட அதிரடிப் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.