மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஷ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு வழிபாடு நிகழ்வின்போது பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதையும் சுவாமி வீதியுலா வருவதையும் வழிபாட்டில் ஈடுபட்டுவரும் பக்தர்களையும் இங்கு காணலாம்.
திருகோணமலை புனித நிக்கலஸ் ஆலயத்தின் வைரவிழா கடந்த சனிக்கிழமை பிற்கபல் கொண்டாடப்பட்டபோது நுவரெலியா குருமுதல்வர் வண.பிதா திலோராஜ் ரஞ்சித் கனகசபை, கிழக்கு மாகாணக் கல்விச் செயலர் இ.தியாகலிங்கம், இலங்கைத் திருச்சபை பிரதேச குருவானவர் அருட்பணி சந்திரன் கிறிஸ்பஸ், டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் ஆகியோர் ஆலயத்திற்கு அழைத்துவரப்படுவதையும் வைரவிழா மலரை அருட்பணி கிறிஸ்பஸ், திருமலை புனித நிக்கலஸ் ஆலயத்தின் திருப்பணியாளர் அருட்திரு.ஹெரல்ட் சிறிதரனிடம் வழங்கி வெளியிட்டு வைப்பதையும், ஆலய வரலாறு பற்றி ஆலயப் பெண் பணியாளர் குழு வில்லுப்பாட்டுக்கச்சேரி மூலம் விளக்குவதையும் இங்கு காணலாம்.