அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பற்றி தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் அரச புலனாய்வுத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களுக்கேற்ப அமைச்சர் அவருடைய பாதுகாப்பு பற்றி தீவிரமாக கவனம் செலுத்தாமலிருப்பதற்காக புலிகள் இயக்கத்தின் சார்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அமைச்சருக்கு உறுதிமொழி ஒன்றைக் கொடுத்திருந்தார் எனவும் இதற்கேற்ப குறித்த சிங்கப்பூர் வர்த்தகர் புலிகள் இயக்கத்தினர் அமைச்சர் ஜெயராஜ் மீது கொலைத் தாக்குதலை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற உறுதிமொழியையே அமைச்சரிடம் கூறியிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த உறுதிமொழியை மேற்படி சிங்கப்பூர் கோடீஸ்வர வர்த்தகர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஷ்ரீலங்காவுக்கு வந்திருந்தபோதே அமைச்சர் ஜெயராஜுக்கு கொடுத்திருந்தார் எனவும் மேற்படி குறித்த அரச உயர்மட்டத்தகவல் வட்டாரம் கடந்த 11 ஆம் திகதி தெரிவித்துள்ளது. இவ்வாறு இதற்கு முன்னரும் புலிகள் இயக்கம் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளாது என்ற உறுதிமொழியை சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் புலிகள் இயக்கம் சார்பில் அறிவித்திருந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்திருந்தது. அந்த வகையில் அமைச்சர்களுக்கு இவ்வாறான உறுதிமொழியை புலிகள் இயக்கம் கூறியிருப்பது இது இரண்டாவது தடவையாகும் என மேற்படி தகவல் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கேற்ப முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மீது புலிகள் இயக்கம் கொலைத் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன்னரும் புலிகள் இயக்கம் சிங்கப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகராகிய சாள்ஸ் ஞானக்கோன் மூலமாக அமைச்சர் மீது கொலைத் தாக்குதல் மேற்கொள்ளுவதில்லை என்ற உறுதிமொழியை அளித்திருந்தது என குறித்த உயர்மட்ட அரச தகவல் வட்டாரம் கூறியுள்ளது.
திவயின:12.04.2008