Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sinhala news
`எனது பயங்கரவாதி மகள்' படத்தை அமெரிக்காவில் திரையிட அனுமதி
[16 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினை, புலிகள் இயக்கப் பயங்கரவாதம் பற்றி கடந்த வாரங்களில் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு வெளிநாட்டுப் பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறான செய்திகளில் இந்தியாவில் புலிகளின் யுத்த சீருடை தயாரிப்பு தொழிலகம் பற்றியும் மற்றும் அமெரிக்க அரசு `எனது பயங்கரவாதி மகள்' (My TerrorisT Daughter) விவரணப் படத்துக்கு அளித்துள்ள அனுமதி பற்றியும் செய்திகள் முக்கிய தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி "எனது பயங்கரவாதி மகள்" திரைப்படம் நோர்வேயில் நோர்வே அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டதாகும். புலிகள் இயக்கத்துக்காகச் சர்வதேசப் பிரசாரம் செய்யும் நோக்கத்துடனேயே நோர்வே அரசு மூலமாக இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும் இதன்மூலம் நோர்வே அரசு புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரசாரத்துக்காகச் செய்துவரும் உதவிகளும் ஆதரவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புலிகளுக்காக நோர்வே அரசு ஆதரவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை அமெரிக்காவில் திரையிடுவதற்கு அமெரிக்க அரசும் அனுமதி வழங்கியிருப்பது புலிகள் சார்புக் கொள்கையை அமெரிக்க அரசு கடைப்பிடிப்பதையே எடுத்துக் காட்டுவதாக குறித்த சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

லங்காதீப: வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 13.04.2008

Email this page Your Opinion Print this page
வன்னியில் 8 படையணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள புலிகள்
தமிழ் நாட்டில் புலிகளின் சீருடை தயாரிப்பு தொழிலகம் முற்றுகை
புலிகள் விவகாரத்தில் சோனியா காந்தி இரட்டைவேடம்
`எனது பயங்கரவாதி மகள்' படத்தை அமெரிக்காவில் திரையிட அனுமதி
அமைச்சர் ஜெயராஜுக்கு கயிறு கொடுத்த சிங்கப்பூர் வர்த்தகர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com