கடந்த காலங்களில் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் இராணுவ உதவியை நாடியிருப்பதைத்தொடர்ந்து சீனாவுடன் சிறீலங்கா அரசு உறவுகளை மேலும் மேம்படுத்திவருவதும் சீனாவிடமிருந்து யுத்த ஆயுதங்களை வாங்குவதற்கு ஏற்பாடுசெய்திருப்பதும் இந்திய அரசின் எதிர் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் வழிவகுத்துள்ளதாக ஆசியாவின் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது பற்றி வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகையில் சுயாதீனமான நாடாகிய சிறிலங்காவுக்கு இந்த விடயத்தில் சுயமாக தீர்மானம் எடுக்கும் உரிமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்குப் பலியாகியுள்ளதாகவும் இந்தியாவும் பயங்கரவாதக்குழுக்களுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் படுகொலை செய்த புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுகளை மேற்கொண்டு இனப்பிரச்சினையைத்தீர்க்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதன்மூலம் அவருடையதும் அவ்வாறே ராஜிவ்காந்தியின் மனைவி சோனியா காந்தியினதும் இரட்டைக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகவும் இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரபல சுயாதீனப் பத்திரிகைகள் விமர்சித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 13.04.2008