Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sinhala news
தமிழ் நாட்டில் புலிகளின் சீருடை தயாரிப்பு தொழிலகம் முற்றுகை
[16 - April - 2008] [Font Size - A - A - A]
புலிகளின் இயக்கத்தினர் அணியும் யுத்தச் சீருடைகள் மற்றும் தொப்பிகள் ஆகியன தமிழ்நாட்டிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அண்மையில் தமிழ்நாடு பொலிஸார் இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் யுத்தச் சீருடைகள் தயாரிக்கும் ஆடைத் தொழிலகத்தை சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

மேற்படி யுத்தச் சீருடைகள் தயாரிக்கும் தொழிலகம் தமிழ்நாடு தென்பகுதி துறைமுகமாகிய ராமேஸ்வரத்தில் இயங்கிவந்துள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்திலேயே மேற்படி புலிகளின் ஆடைத் தொழிலகம் அமைந்திருந்ததாகவும் தகவல்களைத் தொடர்ந்து தமிழ்நாடு இராமேஸ்வரம் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த ஆடைத் தொழிலகத்தை திடீரென முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸார் முற்றுகையிட்டபோது அந்த ஆடைத் தொழிலகத்தில் பெருந்தொகையான ஆடை தயாரிக்கும் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்ததாக தமிழ்நாடு இராமேஸ்வரம் பொலிஸார் தரப்பில் பொலிஸ் பரிசோதகர் ஜீ.வேலுப்பிள்ளை தெரிவித்தார். அங்கு தயாரிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் சீருடைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவை புலிகள் இயக்கத்தினர் அணியும் யுத்தச் சீருடைகள் என்பதும் புலிகள் இயக்கத்துக்காகவே நெடுங்காலமாக அந்த ஆடைத் தொழிலகத்தில் யுத்தச் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப:13.4.2008

Email this page Your Opinion Print this page
வன்னியில் 8 படையணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள புலிகள்
தமிழ் நாட்டில் புலிகளின் சீருடை தயாரிப்பு தொழிலகம் முற்றுகை
புலிகள் விவகாரத்தில் சோனியா காந்தி இரட்டைவேடம்
`எனது பயங்கரவாதி மகள்' படத்தை அமெரிக்காவில் திரையிட அனுமதி
அமைச்சர் ஜெயராஜுக்கு கயிறு கொடுத்த சிங்கப்பூர் வர்த்தகர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com