மன்னார் உட்பட வன்னியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையணியினர் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தினர் படையினரின் தாக்குதல்களினால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் எனவும் புலிகளின் பலம் சிதறடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக 8 ஆவது கெமுனு படையணியின் கப்டன் நிலான் குமாரசிங்க தெரிவிக்கையில்;
படையினர் முன்னேறிவரும் களமுனைகளில் எல்லாம் கடும் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் ஆயினும் அண்மைக் காலங்களில் புலிகள் படையினர் மீது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை என்றும் இதனால் படையினர் தான் புலிகளைத் தேடித் தேடித் தாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுவரை மன்னார் களமுனைகளில் புலிகள் மறைந்திருக்கும் காட்டுப் பகுதிகளை 8 இராணுவப் படையணியினர் ஒன்று சேர்ந்து சுற்றிவளைத்துள்ளதாகவும் படைத் தரப்புத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிரிகேடியர் கேணல் சுஜீவ் தலைமையிலான 581 ஆவது படையணியும் கேணல் சஞ்ஜய வணிகசிங்க தலைமையிலான 582 ஆவது படையணியும் கேணல் சுறாஜ் பங்சஜய தலைமையிலான 583 ஆவது படையணியும் உட்பட பெரும் தாக்குதல் சக்தி வாய்ந்த 8 படையணிகளால் புலிகள் இயக்கத்தினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப: விமர்சனப்பகுதி 13.04.2008