Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
4 டெஸ்ட் போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது
[16 - April - 2008] [Font Size - A - A - A]
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. சர்ச்சை, பரபரப்பு என்று ஆசஷ் தொடரை மிஞ்சும் வகையில் அமைந்த இந்தத் தொடரில் 2-1 என்ற அவுஸ்திரேலியா வெற்றிபெற்று போர்டர் - கவாஸ்கர் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி இந்தியா வந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை விபரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி செப்டெம்பர் 29 ஆம் திகதி இந்தியா வருகிறது. அதாவது பாகிஸ்தானில் மினி உலகக் கிண்ண இறுதிப்போட்டி முடித்த அடுத்த நாள் அதன் பயணம் தொடங்குகிறது. ஒருவேளை மினி உலகக் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டால், இந்திய தொடருக்கு முன்பாக மேலும் 10 நாட்கள் அந்த அணிக்கு ஓய்வு கிடைக்கும்.

இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணி முதலில் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 9 ஆம் திகதி பெங்களூரில் தொடங்குகிறது. மொகாலி, டில்லி, நாக்பூர் ஆகிய இடங்களில் மற்ற டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்தத் தொடர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாண்ட் கூறுகையில், `2007-08 ஆம் ஆண்டு தொடர் பரபரப்பான, திறமையான கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. உலகி ன் தலைசிறந்த 2 அணிகள் தங்களது முழுப் போட்டியையும் வெளிப்படுத்தின. எனவே இந்தத் தொடரும் இந்திய, அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்' என்றார்.

போட்டி அட்டவணை

அக்.2-5 பயிற்சி ஆட்டம்

அக்.9-13 முதலாவது டெஸ்ட், பெங்களூர்

அக்.17-21 2 ஆவது டெஸ்ட், மொகாலி

அக்.28 - நவ.1 3 ஆவது டெஸ்ட், டில்லி

நவ.5-9 4-ஆவது டெஸ்ட், நாக்பூர்

Email this page Your Opinion Print this page
களிமண் தரை டெனிஸ் போட்டியில் முதல் முறையாக ஷரபோவா சாம்பியன்
இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்தில் ஐந்தாவது இடத்திற்கு பின்சென்றது இலங்கை
கான்பூர் ஆடுகளத்தை வடிவமைத்தவருக்கு 10,000 ரூபா அன்பளிப்பு செய்த தோனி
3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் தோல்வி பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு?
`பெண்கள் கிரிக்கெட் சம்பியன்சிப் 2008'
டெண்டுல்கருடன் தொடக்க வீரராக களமிறங்குவதே எனது விருப்பம்
4 டெஸ்ட் போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com