Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கான்பூர் ஆடுகளத்தை வடிவமைத்தவருக்கு 10,000 ரூபா அன்பளிப்பு செய்த தோனி
[16 - April - 2008] [Font Size - A - A - A]
பந்து திரும்பிச்செல்லும் விதமாக கான்பூரில் ஆடுகளம் வடிவமைத்திருந்த சிவகுமாருக்கு நன்றி தெரிவித்ததுடன், 10 ஆயிரம் ரூபா வெகுமதியளித்துள்ளார் இந்திய அணியின் தற்காலிக கப்டன் மகேந்திர சிங் தோனி.

கான்பூரில் இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமமானது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மாதிரி கட்டாந்தரையாக இல்லாமல், கான்பூரில் பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான ஆடுகளத்தை அமைத்திருந்ததால் போட்டியில் முடிவு கிடைத்தது.

அதற்காக சிவகுமாரிடம் நன்றி தெரிவித்ததுடன், 10 ஆயிரம் ரூபா வெகுமதியளித்து ஊக்கப்படுத்தினார் தோனி.

இத்தகவலைத் தெரிவித்துள்ள சிவகுமார், தோனி இறங்கிவந்து ஊக்கப்படுத்தியது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.

காயம் காரணமாக அப் போட்டியில் விளையாடமுடியாமல் போன கப்டன் அனில் கும்பிளேயும், தொடர் நாயகன் விருந்தைப் பெற்ற ஹர்பஜன் சிங்கும் ஆட்டம் முடிந்ததும் நேரில் வந்து பாராட்டியதாக அவர் தெரிவித்தார்.

2 ஆவது இனிங்ஸில் 44 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்.

Email this page Your Opinion Print this page
களிமண் தரை டெனிஸ் போட்டியில் முதல் முறையாக ஷரபோவா சாம்பியன்
இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்தில் ஐந்தாவது இடத்திற்கு பின்சென்றது இலங்கை
கான்பூர் ஆடுகளத்தை வடிவமைத்தவருக்கு 10,000 ரூபா அன்பளிப்பு செய்த தோனி
3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் தோல்வி பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு?
`பெண்கள் கிரிக்கெட் சம்பியன்சிப் 2008'
டெண்டுல்கருடன் தொடக்க வீரராக களமிறங்குவதே எனது விருப்பம்
4 டெஸ்ட் போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com