Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்தில் ஐந்தாவது இடத்திற்கு பின்சென்றது இலங்கை
[16 - April - 2008] [Font Size - A - A - A]
டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்திலுள்ள அதேநேரம், இலங்கை அணி இத்தரவரிசையில் 3 ஆவது இடத்திலிருந்து தற்போது 5 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் நாடுகளின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலிய அணி (141 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

ஆமதாபாத் டெஸ்டில் இனிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி கான்பூர் டெஸ்ட் போட்டியில் தோற்றால் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்ற நிலையிருந்தது. ஆனால், கான்பூர் டெஸ்டில் தென்ஆபிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்ததன் மூலம் இந்திய அணி (111 புள்ளிகள்) 2 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி (109 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1- 1 என்று சமன் செய்த இலங்கை அணி (108 புள்ளிகள்) 3 ஆவது இடத்திலிருந்து 2 இடங்கள் பின்தங்கி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி (108 புள்ளிகள்) 4 ஆவது இடமும் பாகிஸ்தான் அணி (94 புள்ளிகள்) 6 ஆவது இடமும் நியூசிலாந்து அணி (91 புள்ளிகள்) 7 ஆவது இடமும் மேற்கிந்தியா (77 புள்ளிகள்) 8 ஆவது இடமும் பங்களாதேஷ் (1 புள்ளி) கடைசி இடமும் வகிக்கின்றன.

துடுப்பாட்ட வரிசையில் கான்பூர் டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் கங்குலி 7 இடங்கள் முன்னேறி 17 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். டெண்டுல்கர் 13 ஆவது இடமும் டிராவிட் 14 ஆவது இடமும் ஷேவாக் 15 ஆவது இடமும் லட்சுமண் 19 ஆவது இடமும் வகிக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
களிமண் தரை டெனிஸ் போட்டியில் முதல் முறையாக ஷரபோவா சாம்பியன்
இந்திய அணி தொடர்ந்து 2 ஆவது இடத்தில் ஐந்தாவது இடத்திற்கு பின்சென்றது இலங்கை
கான்பூர் ஆடுகளத்தை வடிவமைத்தவருக்கு 10,000 ரூபா அன்பளிப்பு செய்த தோனி
3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் தோல்வி பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு?
`பெண்கள் கிரிக்கெட் சம்பியன்சிப் 2008'
டெண்டுல்கருடன் தொடக்க வீரராக களமிறங்குவதே எனது விருப்பம்
4 டெஸ்ட் போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com