நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கடந்த 2007 இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபரொருவர் அந்நாட்டுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
இக்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பபன் சிங் என்பவரே இவ்வாறு சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.
2007 இல் நடந்த இக்குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்திருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரவ்தஹத் தொகுதியில் அவர் போட்டியிட்டார். அவர் சார்பாக அவரது தந்தை தேர்தல் பிரசாரம் செய்ததுடன், என் மகனை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்ற அவனுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் பிரசாரம் செய்தார்.
தேர்தலில் பபன் சிங் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரது தந்தையிடம் தர தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். வேட்பாளரே நேரில் வந்து கையெழுத்து போட்டால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தெரிவித்துள்ளனர்.