சிம்பாப்வேயில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவை உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கோரி அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினால் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் அங்கு நடைபெற்ற தேர்தலில் தமது வேட்பாளரான மோர்கன் ஸ்வாங்கினாயே வெற்றி பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர்.
இதனால் தேர்தல் முடிவுகளை கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்த வழக்கை சில ஆசனங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நிலவுவதால் அதற்கான விசாரணைகள் நடத்தப்படும் வரை முடிவுகளை வெளியிட முடியாதெனக் கூறி உயர்நீதிமன்றம் எதிர்க்கட்சியினரின் வழக்கை நிராகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்ற எதிர்க்கட்சி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், இவ்வேலை நிறுத்தத்தினால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கேலிக்குரியதும் நம்பிக்கைத் தன்மையற்றதுமென எதிர்க்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நடைபெற்ற தேர்தலிகளில் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே முறைகேடுகளை செய்ய முயற்சிப்பதாகவும் இக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.