உகண்டாவின் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்தொன்பது சிறுவர்கள் உட்பட 21 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.
தலைநகர் கம்பாலாவிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது பூடோ ஆரம்ப பாடசாலை இங்கு 7 முதல் 10 வயது வரையான சிறுவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள அறைகளில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
அப்போது தீ விபத்து ஏற்பட்டதில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் தீயில் கருகி இறந்தனர்.
அந்த அறைக்கு வெளியே மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என பாடசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
விஷமிகள் சிலர் இந்த வேலையைச் செய்திருக்கலாம். மின் கசிவால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது. அறையின் வெளிப்பக்கத்தை தாழிட்ட பின்னர் தீ வைத்திருக்கலாம்.
ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாடசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.