Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
[17 - April - 2008] [Font Size - A - A - A]
* இலங்கை- பாலஸ்தீன நட்புறவு அமைப்பு வேண்டுகோள்

பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகளால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தாராளமான உதவிகளை வழங்குமாறு இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

அந்த வேண்டுகோளில் மேலும் விளக்கப்பட்டிருப்பதாவது;பாலஸ்தீன காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மற்றும் பொருளாதாரத் தடை காரணமாக காஸா மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறார்கள். தவிரவும் அன்றாட வாழ்வுக்கு அவசியமான அடிப்படை உணவு, உடை, நீர், மருந்துகள், மின்சாரம், எரிபொருட்கள் போன்றவற்றின் நெருக்கடிகளால் துடிதுடித்து பரிதாபமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மருந்துகளின்றி, வைத்தியர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றன. எனவே, காஸா மக்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இலங்கை வாழ் மக்களாகிய நாங்கள் மனித நேயம் கொண்டவர்கள் என்ற வகையில் அவர்களை துன்பகரமான வாழ்விலிருந்து மீட்டெடுக்க எம்மால் முடியுமான உதவிகளைச் செய்வது எமது கடப்பாடாகும். காஸா மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களான உணவு, மருந்துப் பொருட்கள், உடுதுணிகள், பணம் மற்றும் ஏனைய உதவிகளை உடனடியாக வழங்குவதன் மூலமும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து அமைதிப் பேரணிகளை வழங்குவதன் மூலமும் எமது ஆதரவை வழங்கலாம்.

அந்த வகையில் இலங்கையிலும் இன, மத, மொழி, கட்சி பேதங்கள் அனைத்தையும் மறந்து பொது அமைப்புகள், பல்வேறுபட்ட நிறுவனங்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நல்லுள்ளம் கொண்ட இலங்கைவாழ் மக்கள் பலரும் இலங்கை பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் கீழ் ஓரணியாக ஒன்றிணைந்து பலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

உங்களால் முடியுமான உதவிகளைச் செய்து காஸா மக்களின் துயர்துடைக்க முன்வாருங்கள். இலங்கை பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் மூலம் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். இதற்காக நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் காஸா மக்களைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றும்.

பொருட்கள் பின்வரும் இரு விதமான முறைகளில் சேகரிக்கப்படும்

பொதுமக்களிடமிருந்து சேகரித்தல்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, கலாசார அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம், சுதந்திரப் பாலஸ்தீனத்திற்கான நண்பர்கள் அமைப்பு (கொழும்பு), ஜம்இய்யத்துஷ் ஷபாப் நிறுவனம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு ஆகிய அமைப்புகள் மாத்திரமே பொதுமக்களிடமிருந்து பின்வரும் பொருட்களை சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளன.

புதிய ஆடைகள், உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணப் பொருட்கள் மேற்படி நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் தவிர்ந்த வேறு எவரிடமும் பொதுமக்கள் பொருட்களை கையளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளரிடமிருந்து சேகரித்தல்

தேயிலை: பர்ஸான் ராஸிக், நிலவ்பர் இலங்கை ஜமாதே இஸ்லாமி.

புதிய உடுதுணிகள்: ஹமீட் அப்துல் கரீம் இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பின் அங்கத்தவர்

பாடசாலை உபகரணங்கள்: நன்த களுதந்திரி பொதுச் செயலாளர் இலங்கை பாலஸ்தீன நட்புறவுக்கான அமைப்பு

மருந்துப் பொருட்களும் வைத்திய உபகரணங்களும்: சிரான் மஷுர், கலாசார அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம்

உதவிகளை செய்ய முன்வருவோர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பொறுப்பாளர்களிடம் உதவிப் பொருட்களை ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் டாக்டர் அன்வர் அல்-அகா காஸாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பிவைப்பதற்கான கப்பல் சேவையை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com