மக்கள் விடுதலை முன்னணியினர் இரு பிரிவுகளாக செயற்படுவதாக செய்திகள் வெளியாகிய போதிலும், மாத்தறை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இப்பிரதேசங்களில் மக்கள் விடுதலை முன்னணியினரின் நடவடிக்கைகளும் தற்போது அமைதியாக காணப்படுகிறது.
தென் மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை. எதிர்வரும் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் எந்தப் பக்கமும் சாராதவர்களாகவே தமது அரசியல் பணிகளை மேற்கொள்கின்றனர்.