புத்தல - கதிர்காமம் வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதையடுத்து தற்போது இந்த வீதியூடாக பகல் நேரங்களில் மட்டும் வாகனங்கள் சென்று வருகின்றன.
நிலைமையைப் பார்த்து இரவு நேரங்களிலும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீதியில் படையினரும் பொலிஸாரும் கூட்டாக ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்குரியவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
இந்த வீதி திறக்கப்பட்டதையடுத்து கதிர்காமத்துக்கு பக்தர்களும் வரத் தொடங்கியுள்ளனர் என ஆலய நிர்வாகம் தெரிவித்தது.
18 இடங்களில் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீதியை விட்டு காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸவினால் இந்த வீதி போக்குவரவுக்காக திறந்து விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தென் மாகாணத்துக்கும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் இணைப்பாக இந்த வீதியுள்ளது.