குஜராத் மாநிலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நர்மதா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 44 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
நேற்று அதிகாலை நர்மதா அணைக்கட்டின் மீது சென்று கொண்டிருந்த பஸ் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தார்போட் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பஸ் ஒன்றில் படோலி எனும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது நர்மதா அணைக்கட்டு மீது பஸ் சென்று கொண்டிருந்த போது அணைக்கட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் ஆற்றில் விழுவதைப் பார்த்த கிராமவாசிகள் உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிராமவாசிகளும் அவர்களுக்கு உதவி செய்தனர்.