காலி அம்பலாங்கொடை பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மிகமோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இவ்விருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் மிகமோசமான கிரிமினல் குற்றவாளிகள் என்பதுடன் இவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களுமாவர்.
கொல்லப்பட்ட இருவரதும் சடலங்கள் அவ்விடத்தில் கிடந்த நிலையில், பின்னர் அங்கு வந்த பொலிஸார் இருசடலங்களையும் எடுத்துச் சென்று அம்பலாங்கொட ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.