எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை பிற்பகல் கொண்டுசெல்லப்பட்ட போது தப்பிக்க முயன்ற சிறைக்கைதியொருவர் சிறைக்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தங்காலைச் சிறைச்சாலையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட போதே இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை வாகனத்தில் இந்தக் கைதி எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோது, சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டு இவர் தப்பிக்க முயன்றபோதே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை தங்காலை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.