இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக ஸ்லோவாக்கியா ஆயுதங்களை வழங்கியதை இலங்கை அரசு பாராட்டியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கைக்கான ஆயுத உதவிகளை ஸ்லோவாக்கியா வழங்கியதைக் கண்டித்து லண்டனிலுள்ள ஸ்லோவாக்கியா தூதரகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் பிரிட்டன் தமிழ் அமைப்புகளால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, ஆயுத விற்பனைக்கு எதிராக தமிழ் அமைப்புகளால் மகஜர் ஒன்றும் ஸ்லோவாக்கியா தூதரிடம் கையளிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மிகவும் கொடூரமானதும் அபாயகரமானதுமான பயங்கரவாத அமைப்பென பல்வேறு தரப்புகளாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பானது தடை செய்யப்பட்டுமுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.