அவிசாவளை - இரத்தினபுரி பிரதான வீதியில் எகலியகொடை மோரகலை சந்தியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக எகலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியொன்றும் கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கப் ரக வாகனத்தின் சாரதியான நளின் அசங்க சேபால (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் களுத்துரை, கல்பான பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக எகலியகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.