Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
[17 - April - 2008] [Font Size - A - A - A]
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சுஜாதா அழகப்பெரும உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களான நாளக மதன்வீர மற்றும் அனுரசாந்த ஆகிய இருவரும் ஏற்கனவே நீதிவானுக்கு அளித்துள்ள இரகசிய வாக்குமூலத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அவரது ஆலோசனையைப் பெறுமாறும் நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக தாம் சட்டமா அதிபருக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.

2006 நவம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் நாரஹென்பிட்டியில் வைத்து இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகேஸ்வரன் கொலை

இதேவேளை,கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரவிந்திர பிரேமரட்ண உத்தரவிட்டார்.

இக்கொலை தொடர்பான தமது விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு குற்றப்பிரிவுப் பொலிஸார் நீதிவானிடம் தெரிவித்தனர்.

அத்துடன் மகேஸ்வரன் எம்.பி.யின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தவர்களிடம் இருந்து இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com