Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
[17 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பேரியல் அஷ்ரப்

கிழக்கு மாகாணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுவித்துக் கொடுத்ததன் பயனாகவே நாம் இன்று கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். இதற்காகவாவது நாம் ஜனாதிபதிக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

அம்பாறை அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் பேரியல் அஷ்ரப் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாணத்தில் ஏதாவது அபிவிருத்திகள் அடைந்துள்ளதென்றால் அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினதும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் காலத்திலேயேயாகும். ஆனால், ஐ.தே.கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டார். அந்தக் காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் பட்ட துன்பங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். அதேபோன்று தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூட பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு என்ன நடந்தது. எமது பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் அலுவலகங்கள் திறப்பதற்கும், வழிவகுத்துக் கொடுக்கப்பட்டது. வாழைச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பட்ட துன்பங்களை சற்று சிந்தித்து பாருங்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த எமது விவசாய நிலங்களுக்குக் கூட எமக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டதா?

தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கை மீட்டதன் பயனாகத்தான் நமது விவசாய நிலங்களில் இம்முறை விவசாயம் செய்து அறுவடையும் செய்துள்ளோம்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் எமது மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்தே எமது பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திகளை கொண்டுவந்தார். தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஏழு வருடங்களாக இப்பகுதி மக்களுக்கு சாதித்துக் கொடுத்து என்ன?

இரண்டு வருடம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசின் பங்காளியாக இருந்தார்கள். தலைவர்கள் எம்.எச்.எம். அஷ்ரப் 1993 இல் சில சவால்களுக்கு முகங்கொடுத்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 முஸ்லிம் பிரதேச சபைகளில் ஏதாவது ஒன்று தோல்வி கண்டால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வேன் என தெரிவித்தார். ஒரு பிரதேச சபை தோல்வியுற்றதால் அவர் தனது பாராளுமன்ற பதவியை ராஜிநாமா செய்து காலம் சென்ற எம்.எம். முகையதீனை பாராளுமன்றம் அனுப்பினார்.

அவர் செய்தவை சமூகத்தின் நலத்துக்கு அவர் காட்டியது ஒரு முன்மாதிரி? ஆனால், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் செய்திருப்பது மக்களை திசைதிருப்புவதற்கும் அனுதாபத்தை பெறுவதற்குமேயாகும். தேர்தல் முடிந்ததும் அவர்களிடம் உள்ள தேசிய பட்டியல் ஊடாகவே மீண்டும் பாராளுமன்றம் வருவதற்கே அவர்கள் திட்டம் தீட்டியுள்ளார்கள்.

இந் நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எம்.ஐ.எம். றபீக், சட்டத்தரணி அபுல் கலாம், இக்காம் மொஹமட், கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான வெஸ்டர் றியாஸ், சாய்ந்தமருது எம். சலீம், மருதமுனை எம். உவைஸ் ஆசிரியர், பொத்துவில் முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸீஸ், அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com