மணலாறு பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏழு மோதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் எட்டுப் படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஆண்டான்குளம், கிரிப்பன்வெவ, ஜனகபுர பகுதிகளிலேயே இந்த மோதல்கள் காலை 10.40 மணி முதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்றுள்ளன.
இந்த மோதல்களிலேயே இரு படையினர் கொல்லப்பட்டதுடன் எட்டுப் படையினர் படுகாயமடைந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம் இந்த மோதல்களில் விடுதலைப்புலிகள் தரப்பில் 20 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்
செவ்வாய்க்கிழமை வவுனியா மற்றும் மன்னார் பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.