Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
[17 - April - 2008] [Font Size - A - A - A]
* அதிகரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

எம்.ஏ.எம்.நிலாம்

நேற்று நள்ளிரவு முதல் அரிசியின் விலைகள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற அவசர ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை அறிவித்தார்.

நேற்றுமாலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற அரிசி விலை தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே அரிசியின் விலையை உத்தரவாதப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் சம்பா அரிசியின் மொத்த விலை 63 ரூபாவாகவும் சில்லறை விலை 70 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டரிசியின் மொத்தவிலை 57 ரூபாவாகவும் சில்லறை விலை 65 ரூபாவாகவும், சிவப்பு பச்சை அரிசி மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 65 ரூபாவாகவும், வெள்ளைப்பச்சை அரிசி மொத்த விலை 48 ரூபாவாகவும் சில்லறை விலை 55 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவாத விலை இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் இவ்விலையைவிட கூடுதல் விலைக்கு அரிசியை விற்போர்மீதும், அரிசியை பதுக்க முயற்சிப்போர் மீதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கடும் நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை நெல்லைக் கொள்வனவு செய்து பதுக்கிவைத்துள்ள நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து அந்த நெல்லை பறிமுதல் செய்து உத்தரவாதவிலைக்கு சந்தைக்குக் கொண்டுவரவும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com