கிழக்கு, வடமத்திய மாகாண பிராந்திய நிர்வாகங்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பான யூஎஸ்எய்ட் 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகங்களின் பதிலளிக்கும் கடப்பாட்டை மேம்படுத்துதல், முரண்பாட்டுத் தீர்வு என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த உதவி வழங்கப்படுகிறது.
இன மோதல்களின் விளைவாக ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி தேவைகளுக்கு உதவுவதற்காகவே இத்தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் புதிய நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதும் இலங்கைக்கு உதவியளிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதில் யூஎஸ்எய்ட் ஈடுபாட்டுடன் இருப்பதாக யூஎஸ்எய்ட்/ இலங்கை குழுவின் பணிப்பாளர் ரெபேக்கா ஜோன் கூறியுள்ளார்.