யாழ்ப்பாணத்திலுள்ள தனது கல்லூரி மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த ஒரு மாணவன் ஒரு வருடத்துக்கு மேல் காத்திருந்துவிட்டு கொழும்புக்கு வந்தார்.
அவர் ஜாவத்தையிலுள்ள தேசிய அடையாள அட்டை வழங்கும் திணைக்களத்துக்குச் சென்று தான் வந்த நோக்கத்தை தெரிவித்தார். எதிர்வரும் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எழுதுவதற்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமாக்கப்பட்டிருப்பதையும் வினயமாகச் சுட்டிக்காட்டினார்.
திணைக்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவரிடமிருந்து தேவையான விபரங்களையெல்லாம் அறிந்தபின் "யாழ்ப்பாணத்துக்குரிய தேசிய அடையாள அட்டைகள் அதோ குவியலாக கிடக்கின்றன. அவற்றில் உமது அடையாள அட்டை இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளும்" என்று கேட்டுக்கொண்டார்.
மாணவன் உடனே அந்தக் குவியலில் தேடுதல் நடத்தி எப்படியோ அடையாள அட்டையைக் கண்டுபிடித்துவிட்டார்.
ஏனைய தேசிய அடையாள அட்டைகள் எத்தனை காலந்தான் அங்கு கிடக்கப்போகின்றன என்பதே கேள்வி.