கல்பிட்டியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி கடற் தொழிலுக்குச் சென்ற எஸ். யூட் என்ற 40 வயது நபர் காணமால் போய்விட்டதாக உறவினர்கள் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இவர் இது வரையும் வீடு திரும்ப வில்லை எனவும், நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.