தென்மராட்சி உசன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை வீடொன்றின் மீது ஷெல் வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றுக் காலை 10.30 மணியளவில் இப்பகுதியில் வீடொன்றின் மீது ஷெல் ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது.
இதனால், அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீ.ராஜேஸ்வரி (43 வயது) என்பவரே படு காயமடைந்தவராவார்.