ஊவா மாகாணத்தின் வசந்த காலத்தினை முன்னிட்டு வருடா வருடம் நடைபெறும் `பொக்ஸ் ஹில் சுப்பர் குரஸ்' கார்ப் பந்தயப் போட்டி தியத்தலாவை நரிமலை இராணுவ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை நடைபெறும் இம் மாபெரும் கார் பந்தய போட்டியில் இலங்கையிலுள்ள பிரபல கார் ஓட்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சீ.சீ.2500 மோட்டார் கார் மற்றும் ஜீப் வண்டிகள், மென்ரக கார்களும் போட்டியில் பங்கேற்கவுள்ளன. இது தவிர மோட்டார் சீ.சீ.90, சீ.சீ. 125, சீ.சீ.200, சீ.சீ.1500 ரக மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டியும் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை, இந்திய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.