அக்கரைப்பற்று சாகாமம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றுக் காலை பத்து மணியளவில் இவர் கட்டிட வேலைக்காகச் சென்று கொண்டிருந்த போது சாகாமம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானார்.
மோட்டார் சைக்கிளொன்றில் இவரைத் துரத்தி வந்தவர்களே இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
தலையிலும் மார்பிலும் படுகாயமடைந்து அவ்விடத்தில் வீழ்ந்த இவர் பின்னர் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அக்கரைப்பற்று பன்சலை வீதியைச் சேர்ந்த பரமஜோதி பிரகாஷ் (21வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார்.