ஹெரோயின் போதைப்பொருளை உள்ளங்கியில் வைத்து மாலைதீவுக்கு கடத்திச்செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாலை தீவுப் பிரஜைகளான இம்ரஹிம் எடம் மற்றும் அயிஸா உஸ்னா ஆகிய இரு இளம் ஜோடிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உப்புல் ராஜகருண உத்தரவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானப்படையினரால் சோதனையிடப்பட்டபோது 122 கிராம் ஹெரோயின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
விமானப்படையினர் இருவரையும் போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இருவரும் இங்கு உயர் கல்வி கற்பதாகவும், விடுமுறையில் மாலைதீவுக்கு செல்ல விமான நிலையம் வந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.