*மீண்டும் மண்சரிவு இடம்பெறும் அபாயம்
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பிரயாணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று தேசிய கட்டிட ஆய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த புவியியல் நிபுணர் ஆர்.எம்.எஸ்.பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
"பெரகலை- கொஸ்லந்த பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய மண் சரிவுகளையடுத்து தொடர்ந்தும் இப்பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகின்றது. ஏற்கனவே, மண்சரிவுகள் இடம்பெற்ற பகுதிகளில் மீண்டும் மண் சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
பெரகலை- கொஸ்லந்த பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மண் சரிவுகளினால் வாகனப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
தற்போது இப்பகுதிகளில் பெய்துவரும் பெருமழையினையடுத்து, மண் சரிவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மண்சரிவுகளுக்குள்ளாக்கப்படும் பகுதிகளென இனம் காணப்பட்ட இடங்களிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களில் குடியமருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
எச்சமயத்திலும் இப்பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட கூடுதலான வாய்ப்புகள் உள்ளன"என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.