யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பழைய பூங்காவில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதற்காக 25 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் பழைய பூங்காவில் அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கிவந்தது.
யுத்த நடவடிக்கைகள் காரணமாக பழைய பூங்காவில் உள்ள கட்டிடங்களும் அரச அதிபரின் வாசஸ்தலமும் சேதமடைந்தன.
தற்போது அரசாங்க அதிபர் வாடகை வீடு ஒன்றில் தங்கி கடமைக்கு வரவேண்டியுள்ளது.
புதிய வீடு ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என யாழ் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.