Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
[18 - April - 2008] [Font Size - A - A - A]
*பசறை பிரதேசசபை உறுப்பினர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ரூபா விலைக் கழிவுடன் 10 கிலோ அரிசிக்கான கூப்பன் வழங்கும் திட்டமானது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் திட்டமென்பது தற்பொழுது தெட்டத் தெளிவாகிவிட்டது என்று செ.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பசறைப் பிரதேச சபை உறுப்பினரான செல்லையா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது; கடந்த ஞாயிற்றுக்கிழமை பசறை டெமெரியா தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசிக்கான கூப்பனை வழங்குவதற்கு பிரதியமைச்சர் ஒருவரும் வரவழைக்கப்பட்டு வெகுவிமர்சையாக விழா நடத்தப்பட்டது. கூப்பபனை பெற்றுக் கொள்ளும் வண்ணம் தொழிலாளர்கள் வேலைக்கும் செல்லாது காத்திருந்தனர். இங்கு 10 பேருக்கு மாத்திரமே கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஏனையோரிடம் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டது.

எவருமே அவற்றை வைத்திருக்க வில்லை. இது குறித்து ஏற்கனவே அறிவிக்காததால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

10 ரூபா விலைக்கழிவுடன் வழங்கப்படும் 10 கிலோ அரிசியை கூட்டுறவுச் சங்கத்திலே பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட கூப்பனை வைத்திருக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு நாள் வேலைக்கான 260 ரூபா நாட் கூலியை இழந்தே இந்த அரிசியைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு எவரும் கூப்பன் மூலம் அரிசியை பெற்றுக் கொள்ள முடியாது.

100 ரூபா இலாபத்திற்காக 260 ரூபாவை இழக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனியார் கடைகளை விட கூட்டுறவுச் சங்கக் கடைகளில் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் சமுர்த்தி உணவு முத்திரை மூலம் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதேசசபை கூட்டத்தில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய கடைகளில் அரிசி 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் பொழுது கூட்றவுச் சங்கக் கடைகளில் அதைவிட அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டதைக் காணமுடிந்தது. இந்நிலையில் கூட்டுறவுச்சங்கத்தில் அரிசியைப் பெற்றுக் கொள்வதால் 10 ரூபா விலைக்கழிவென்பது வெறும் ஏமாற்று வித்தையென்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

தொழிலாளர்கள் பலர் இதனை உணர்ந்து இந்த அரிசிக் கூப்பனைப் பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதையும் காணமுடிகிறது. அது மாத்திரமல்ல, ஒரு குடும்பத்தில் 10 உறுப்பினர்கள் இருந்து ஒருவர் வேலை செய்யும் பட்சத்தில் அவருக்கு மாத்திரமே கூப்பன் வழங்கப்படுகிறது. மற்றும் தோட்டத்தில் வேலை செய்து ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும், வேலை இல்லாது இருக்கும் குடும்பங்களுக்கும் இக்கூப்பன் வழங்கப்படவில்லை. ஆகவே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டமே இது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாயின் தோட்ட நிர்வாகத்தினூடாக இந்த அரிசியை அரசாங்கம் வழங்கியிருக்க முடியும். அதை விடுத்து தொழிலாளர்கள் ஒரு நாள் வேதனத்தை இழந்து இந்த அரிசியைப் பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கக்கூடாது.

இந்தக் கூப்பனை வழங்குவதற்கு ஒரு வைபவம், அதற்கு ஒரு பிரதியமைச்சர் வரவேண்டுமா? அரசாங்கம் 10 ரூபா விலைக்கழிவுடன் அரிசியை மானிய விலையில் வழங்கப்போவதாக தம்பட்டம் அடிப்பது வெறும் ஏமாற்று வேலையே.

இதற்கு மலையக அரசியல்வாதிகள் துணைபோவது மலையக மக்களை குழித்தோண்டிப் புதைப்பதற்கு சமனாகும் என்றார்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com