Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
[18 - April - 2008] [Font Size - A - A - A]
*பஷீர் சேகுதாவூத் அறிக்கை

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலமே தாங்கள் வெற்றிபெற முடியும் என்ற அரசின் கணக்குக்கு அமைவாக முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் அரசியல் பிரதானிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சித் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

கிசுகிசுக்கப்பட்டு பிசுபிசுத்துப்போன அரசாங்கத்தின் `முஸ்லிம் கூட்டு முன்னணி' என்ற நாடகத்தின் பின்பு தங்களது வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்த ஹிஸ்புல்லாஹ், திடீர் தௌபீக் போன்ற அதியுயர் பீட உறுப்பினர்களைப் பாவித்து, தனித்துத் தேர்தலில் போட்டியிடுமாறு தலைமைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இவ்விருவரும் அரச முக்கியஸ்தர்களின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே அழுத்தம் கொடுத்தவர்களாவர். கிழக்கில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் பெரும்பான்மையினர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்பிய போதும் அரசுடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டும் என்று கூறியவர்களில் மேற்படி இருவருமே மிக முக்கியமானவர்களாக விளங்கினர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கட்சியுடன் இணைத்து தேர்தலில் குதிக்க வைப்பது சம்பந்தமாகத் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இப்பேச்சுவார்த்தையின் போது `அரசினால் மதரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இனரீதியாகவும், காணி விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த்தி செய்யுங்கள்; ஆலோசித்துப் பார்க்கலாம்' என்று மு.கா. தலைமை அரசின் அந்த முக்கிய புள்ளிகளிடம் கூறியிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இக் கோரிக்கை கிழக்கு மாகாணத்துக்கான அரசின் நிகழ்ச்சி நிரலை அடியோடு மறுதலிக்கும் வகையில் அமைந்திருந்தது. அரசும் இதனை உணர்ந்து கொண்டது. தங்களது பிரதான இலக்கையே சிதைக்கும் இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு விரும்பவில்லை.

எனவே தனது இரண்டாவது திட்டத்துக்குள் அரசு நுழைந்தது. அது தான் "முஸ்லிம் கூட்டு முன்னணி" நாடகம்.

இரண்டாவது திட்டமும் தோல்வியடைந்தவுடன் அரசு மூன்றாவது திட்டத்திற்குப் பாய்ந்தது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தனித்துப் போட்டியிட வைப்பது இம்மூன்றாவது திட்டமாகும். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், முஸ்லிம்கள் கிழக்கில் ஆளும் தரப்பினராக வராமல் தடுக்க முடியும் என்பதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கூட்டு இலகுவாக ஆட்சிபீடமேற முடியும் என்பதும் சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும் உண்மைகளாகும்.

அரசின் இந்தத் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானமாக எடுக்கும் வகையில் தூண்டுதல்களைச் செய்வதற்கு, மு.கா. கட்சிக்குள் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ்வையும், திருமலையைச் சேர்ந்த திடீர் தௌபீக்கையும் தனக்குத் துணையாக அரசு தேர்ந்தெடுத்தது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து எவரையும் அரசினால் கையாள முடியவில்லை.

இவ்வாறான நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் மூன்றாவது திட்டத்தையும் முறியடிக்கும் வியூகத்தை வகுத்துச் செயற்பட்டது.

அரசாங்கம் முஸ்லிம் அமைச்சர்களுடனும் நமது கட்சிக்குள் இருந்த பிரமுகர்களுடனும் சேர்ந்து முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் காங்கிரஸையும் தோற்கடிக்க வகுத்த வியூகத்தின் அடிப்படையிலான மூன்று கட்ட முயற்சிகளை முழுமையாகவும் 4 ஆம் கட்ட முயற்சியை பகுதி அளவிலும் தோற்கடிக்க மு.கா. வினால் முடிந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசுடன் கூட்டமைக்க நிர்ப்பந்தித்தல் இதன் மூலம் அரசு வெற்றியடைதல். அவர்கள் விரும்பிய பொம்மை முதலமைச்சரை, நியமித்து கிழக்கில் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.முஸ்லிம் கூட்டு முன்னணியை உருவாக்குதல். இதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற சபை உறுப்பினர்களைத் தேர்தலின் பின்பு இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நட்டாற்றில் விட்டுவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தல் - நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தனித்துப் போட்டியிடத் தூண்டுதல் இதன் மூலம் இலகுவாக வெற்றிபெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிர்க்கட்சியாக்கி, இக்கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்று மக்களை நம்ப வைத்து, மக்களுக்குள் செல்வாக்கிழக்கச் செய்து அழித்து விடுதல்- நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றல்.

மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களும் நிறைவேறாவிட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களைப் பிரித்தெடுத்து கட்சியின் வாக்கு வங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தல் என்ற பலவீனமான திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஹிஸ்புல்லாவும், திடீர் தௌபீக்கும் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் நான்காவது திட்டத்தை முழுமையாக முறியடிப்பது மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. முடிந்தவரை போராடினோம். போராடிக் கொண்டிருக்கிறோம்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com