Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
[18 - April - 2008] [Font Size - A - A - A]
எமது பிரதேசத்தின் அபிவிருத்தி, கிராமங்களின் முன்னேற்றம் போன்றவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் சின்னமான வெற்றிலைக்கே வாக்களிக்க வேண்டுமென இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாபா சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். காத்தான்குடி டீன் வீதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மிகவும் அவசியமானதாகும். அதனை தற்போதய அரசாங்கம் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட துறைகளின் அபிவிருத்திகாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரவும், பகலும் உழைத்து வருகிறார். அதனை மேலும் சிறப்பாகச் செய்யும் வகையிலேயே விரைவில் இம்மாகாணத்திற்கான தேர்தலும் நடைபெறவிருக்கின்றது.

பன்னெடுங்காலமாக அபிவிருத்தி செயற்பாடுகள் எதுவுமின்றி நமது பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தினை மிகவும் முனைப்புடன் நின்று அபிவிருத்தி செய்வதற்கு நமக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு பெருமளவிலான நன்மைகளைப் பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே விவேகமிக்க நமது சிந்தனையினை நம்மால் வெளிப்படுத்தியதாக இருக்கும்.

வெற்றிலைச் சின்னத்திற்கு நாம் வாக்களிக்காமல் விடுவோமேயாகில் நாம் பல்வேறு வழிகளிலும் பின் தள்ளப்பட்டு விடுவதுடன் நமது பிரதேசத்திற்குக் கிடைக்க வேண்டிய பலகோடி ரூபாக்களுக்கான அபி விருத்தி செயற்திட்டங்களையும் கோட்டைவிட்டு விடக்கூடிய அபாயகரமான சூழ்நிலையை நாம் வலிந்து ஏற்படுத்தியவர்களாக ஆகிவிடுவோம்.இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவேநாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் அரசின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியையும் உறுதிப்படுத்துவோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com