கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு மீண்டும் பக்தர்களும் உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கியுள்ளனர். சிலர் காலையில் வந்து ஆலயத்தில் வழிபட்ட பின்னர் சற்றுத் தங்கியிருந்து விட்டு மாலையில் திரும்பி விடுகின்றனர். வேறு சிலர் இரவு தங்கி மறுநாள் திரும்புகின்றனர்.
கதிர்காமம் வருபவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதுவித அச்சமுமின்றி பொதுமக்கள் கதிர்காமத்துக்கு வந்து போகலாம் எனவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம் யால தேசியவனம் , புத்தல வீதி என்பவற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கதிர்காமத்துக்கு மக்கள் வருவதை தவிர்த்துக் கொண்டிருந்தனர்.
கடந்த புத்தாண்டு தினம் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றதையடுத்து பக்தர்களும் உல்லாசப் பயணிகளும் தற்போது வரத் தொடங்கியுள்ளனர்.