கம்பஹா பொலிஸ் பிரிவின் சில இடங்களில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரையும் பொலிஸார் சுற்றி வளைப்புத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் வதிவிடத்தை உறுதிப்படுத்தாத காரணத்தால் கைது செய்யப்பட்டார். அத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
திங்கட்கிழமை இரவு மேற்கொண்ட தேடுதலின் போது ஆறு சிங்கள இளைஞர்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்தாத காரணத்தால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.