வடமாகாண சமூகநலத்துறை திணைக்களத்தினால் வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குக் கண்ணாடி, காதுகேள் கருவி, கையால் சுற்றும் முச்சக்கரவண்டி, சக்கரநாற்காலி, வெள்ளைப் பிரம்பு, ஊன்றுகோல் செயற்கைக் கைகால் உறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள், உபகரணங்களை வேறு யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், ஊனமுற்றோர் தொடர்பான காலாண்டு அறிக்கையில் பெயர் குறிப் பிடப்பட்டவர்கள் உபகரணங்களைப் பெற தகமையுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம் கிராமசேவையாளரின் சிபார்சு கடிதம், வைத்தியரின் அறிக்கை, பிரதேச செயலாளரின் சிபார்சு கடிதம் உட்பட சகல ஆவணங்களும் சமூக சேவைகளுக்கான மாவட்ட அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என வடமாகாண பணிப்பாளர் ஜே.எஸ். அருள்ராசா அறிவித்துள்ளார்.