* மகா ஓயாப்பகுதியில் சம்பவம்
கிராம பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய கிராம பாதுகாப்பு வீரர், திடீரென வீட்டிற்குள் புகுந்து தம்மிடமிருந்த ரி 56 ரக துப்பாக்கியினால் தனது மனைவியை சுட்டு விட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிர்துறந்த சம்பவமொன்று, மகா ஓயா என்ற இடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மகா ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கே.எம். உகத்ரணசிங்க என்பவரே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தவராவார்.
இவரது மனைவி, துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் மகா ஓயா அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் ஆபத்தான நிலையிலிருந்து தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பாதுகாப்பு வீரருக்கு வேறொரு பெண்ணுடனிருந்து வந்த காதல் தொடர்பே, அவ்வீரர் தனது மனைவியை சுட்டுவிட்டு மனைவி இறந்து விட்டார் என்ற பயத்தினால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டிருக்கலாமென்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மகா ஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்ஜித் சில்வா தீவிர புலன் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றார்.