கடவுச்சீட்டுகளில் மோசடி செய்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு பயணம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களையும் நீர்கொழும்பு நீதிவான் ஜனனி அல்விஸ் தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.
இவ்வாண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணம் செய்யவந்தபோது இவர்களின் கடவுச்சீட்டுகளை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பரிசீலித்தபோது அவற்றில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு பிடித்தனர். பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பொலிஸார் இவர்களை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்தனர். இவர்கள் மீண்டும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
எஸ்.ஜெராட் (யாழ்ப்பாணம்) , ஏ.தில்லைநாதன் (மன்னார்), ஏ.பெர்னாண்டோ (சிலாபம்), ரீ.எம்.சியாம் (குளியாப்பிட்டிய ) ஆகிய நபர்களே சந்தேக நபர்களாவர்.