*புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் மூன்று தாக்குதல் அணிகள் கொழும்பிலும் தெற்கிலும் ஊடுருவியுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது
இது தொடர்பாக ஊடகமொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
80 சிறப்புப் பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் மூன்று தளபதிகளின் கீழ் தெற்கில் ஊடுருவியுள்ளதாகவும் இவர்கள் முக்கிய இலக்குகள் மீது சமகாலத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இடம் பெற்று வரும் மோதல்களில் ஈடுபடுத்துவதற்காக முக்கிய படையணிகள் வடக்கு போர் முனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் திறனற்றவர்கள் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.