*16 பொது மக்களும் கொல்லப்பட்டதாக கூறுகிறார் இராணுவ பேச்சாளர்
கடந்த 17 நாட்களில் படையினர் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 236 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாதுகாப்பு நிலைவரம் குறித்த தகவலை வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 17 நாட்களில் படையினர் தரப்பில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 236 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் மோதல்களில் சிக்கி 16 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 83 பேர் காயமடைந்துள்ளனர்.