முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
புதுக்குடியிருப்புக்கு வடமேற்கே 15 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்றுக் காலை 6.25 மணியளவில் இந்தத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
புலிகளின் முக்கிய விநியோகப் பாதையாகவும் பொறியியல் தளமாகவும் செயற்பட்ட நிலைகள் மீதே நேற்றுக் காலை சுமார் பத்து நிமிடம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நாட்களாக மேற்கொண்ட வான்வழி கண்காணிப்புக்களையடுத்தே நேற்றுக் காலை இங்கு கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் இதில் புலிகளின் இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.