Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
[18 - April - 2008] [Font Size - A - A - A]
*சுட்டிக் காட்டுகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

இலங்கையிலிருந்து சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான `இரங்கற்பா' என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடியுள்ளது.

இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு வருடம் தாங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பின்னர் பிரயோசனமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான பொறியில் தாம் சிக்கிக் கொண்டனர் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியா, பிரான்ஸ், இந்தோனேசியா,அமெரிக்கா, நெதர்லாந்து, பங்களாதேஷ், கனடா, சைப்பிரஸ், பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்களடங்கிய சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவானது பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு உதவியளிக்கும் தனது முயற்சிகளை கைவிட்டுள்ளது.

நீதி, மனித உரிமைகள் என்ற நோக்கங்களின் அடிப்படையில் குழுவினர் எதிர்பார்த்திருந்த நோக்கமானது ஆபத்தான சதிக்கு இட்டுச் செல்லப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். அதனால், அவர்கள் தமது பணிகளை கைவிட்டமை இயற்கையானதொரு விடயமாகும்.

ஜனாதிபதிக்கு சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் மனித உரிமைகள், நீதி தொடர்பான பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கவும் விருப்பம் இல்லாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

ஆணைக்குழு அமர்வுகளில் நலன்கள் தொடர்பான முரண்பாடு காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் போதியளவாக இல்லையெனவும் அமர்வுகளில் வெளிப்படைத் தன்மை, காலம் என்பன தொடர்பாக குறைபாடுகள் இருப்பதாகவும் அரச அமைப்புகளிடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் இல்லையெனவும் ஆணைக்குழுவுக்கு நீதி தொடர்பாக சுயாதீனமாக இயங்கும் தன்மை போதாமல் இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் குழு சுட்டிக் காட்டியுள்ளதுடன் ஆறு விடயங்களை உள்ளடக்கிய சிபார்சுகளையும் ஜனாதிபதிக்கு கையளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையின் குற்றவியல் நீதித்துறை முறைமை தொடர்பாக சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர் குழுவின் அறிக்கையானது இறந்த உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை போன்றதாக கொள்ளப்பட வேண்டும் என்று ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தமது பரிந்துரைகளில் ஏதாவதொன்று அமுல்படுத்தப்படுமென நிபுணர்கள் குழு நம்புமாயின் அதனை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிமுறைமையில் பரவியிருக்கும் நோய் குறித்தே சிபார்சுகளின் பெறுமானமானது சுட்டிக் காட்டியுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தை நிபுணர்கள் குழு கடுமையாக விமர்சித்திருக்கிறது. எவ்வாறாயினும் நிபுணர்கள் குழுவின் விமர்சனங்கள் அடிப்படை ஆதாரமற்றவையென சட்ட மா அதிபர் கூறியுள்ளார். நம்பிக்கையை ஏற்படுத்தும் எந்தவொரு முறைமையிலும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றின் மீது இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் போது திறமை வாய்ந்த பக்கச்சார்பற்ற நபர்களால் விசாரணை செய்யப்பட வேண்டும். அவற்றில் உண்மை இருந்தால் பரிகாரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிபார்சுகளை தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் நோயாளியே மருத்துவராக உருவாகிய தன்மை காணப்படுகிறது.

இலங்கையின் நீதித்துறை தொடர்பாக சர்வதேச நிபுணர்கள் குழுவினர் தமது அனுமானங்களை முன்வைத்துள்ளனர்.

இலங்கை எத்தகைய இடத்தில் இருக்கின்றது என்பதை உலகம் புரிந்து கொள்வதற்குரிய உதவிகளை வழங்குவது அவர்களின் கடப்பாடாகும். நீதித்துறை முறைமையை பாதித்திருக்கும் நோய்கள் தொடர்பாக ஆழமாக புரிந்து கொள்ளாவிடின் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தீவிரமான நடவடிக்கைகளை விருத்தி செய்வதென்பது சாத்தியமற்றதொன்று என்றும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com