அவுஸ்திரேலிய தூதுவர் காதி லுக்மனை நேற்று சந்தித்த மேலக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளருமான மனோகனேசன் அண்மைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவியடிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சின்போது கொல்லப்பட்ட 15 வயது சிறுமியையும் தென்னந்தோட்டமொன்று சின்னாபின்னமாகிக் கிடப்பதையும் காணலாம்.
பலஸ்தீனத்தில் நடைபெறவுள்ள முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க பிரதமர் அலுவலகத்திற்குசென்ற இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அகாஸை பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கைலாகு கொடுத்து வரவேற்பதைக் காணலாம்.