வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய சென். ஜோன்ஸ் கல்லூரியால் மத்திய கல்லூரி பந்து வீச்சாளர்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. மதிய போசன இடைவேளைக்கு முன்னரே சென் ஜோன்ஸ் அணி முதல் இனிங்ஸில் 64 ஓட்டங்களில் ஆட்ட மிழந்தது.
சென்.ஜோன்ஸ் வீரரான ஜெயந்தன் அதிகூடுதலாக 24 ஓட்டங்களையும் ஹரிவதனன் 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் நவநிதி 4 விக்கெட்டையும் கோபிகன் - 3, ஷெல்டன் -3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டி சனிக்கிழமை வரை நடைபெறும்.